கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தின் மீது பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமான வழிசெலுத்தல் கட்டணம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் மூலம் அறவிடப்படுவதாகவும், 1985ஆம் ஆண்டு முதல் அது திருத்தப்படவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் கொழும்பு விமான தகவல் பிராந்தியத்தில் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கான விமான வழிசெலுத்தல் கட்டணத்தை திருத்துவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Leave a Reply

X