22 வது உலகக் கிண்ண உதைபந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு F பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர். போட்டியின் 44 வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிக்கி பட்ஷியாய் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி போட்டியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் முடிவில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

November 24, 2022, 11:38 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X